ஊறுகாய் பாக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ஐம்பது கிராம் ஊறுகாய் பாக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம் விவரம்: கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் கிடைக்காத கிராமப்புற பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு பாக்கெட் ஊறுகாய் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 
ரூ.1, ரூ.2 மற்றும் ரூ.5 உள்ளிட்ட குறைந்த விலைகளில் விற்கப்படும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் ஊறுகாய்கள் இடம்பெற்றுள்ளதால், தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணவுத் தேவைகளில் இவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் உள்ள ஏழை மக்களில் 65 சதவீதம் பேர் பயன்படுத்தும் இந்த நுகர்பொருளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையது இல்லை.
கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் விதத்திலும், 50 கிராம் எடைக்கும் குறைவான ஊறுகாய் பாக்கெட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com