அதிமுகவைச் சேர்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பி.சரஸ்வதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.
கபிலர்மலை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பி.சரஸ்வதி. அதிமுகவைச் சேர்ந்தவரான இவர் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது திமுகவின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, கிழக்கு மாவட்டச் செயலாளர் பார்.
இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.