வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடுவேனா?: அரசு பதிலுக்கு நளினி எதிர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பரோல் வழங்கக் கோரி விளக்கமனு தாக்கல் செய்துள்ளார். அதில், அரசுத் தரப்பினர் தெரிவித்த கருத்துக்கு அவர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பரோல் வழங்கக் கோரி விளக்கமனு தாக்கல் செய்துள்ளார். அதில், அரசுத் தரப்பினர் தெரிவித்த கருத்துக்கு அவர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாத பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் நளினிக்குப் பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்குத் தப்பி சென்று விடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நளினி தரப்பில் விளக்கமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்ததை சுட்டிகாட்டியுள்ள நளினி, 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து விட்டதால், முன்கூட்டியே விடுதலை பெறும் உரிமை தனக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை காரணம் காட்டி எனக்கு அரசு பரோல் வழங்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 
பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வேன் என்ற அரசின் பதில் தவறானது. இந்த வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளனுக்கு 2 மாத காலம் பரோல் வழங்கியதைப் போல், எனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்ய 6 மாத காலம் பரோல் வழங்க வேண்டும் என அந்த விளக்க மனுவில் கோரியுள்ளார். 
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com