தாயின் கையை உதறிவிட்டு சாலையின் குறுக்கே ஓடிய குழந்தை; வாகனத்தில் மோதித் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்! (வீடியோ)

சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த 4-வயது சிறுவன் கையை உதறிவிட்டு சாலையின் குறுக்கே ஓடியதில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாயின் கையை உதறிவிட்டு சாலையின் குறுக்கே ஓடிய குழந்தை; வாகனத்தில் மோதித் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்! (வீடியோ)

பெரும்பாக்கம் அருகே கடந்த டிசம்பர் 8-ம் தேதி தன் தாயுடன் சேர்ந்து சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த 4-வயது சிறுவன் கையை உதறிவிட்டு சாலையின் குறுக்கே ஓடியதில் வேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் இருக்கும் கிருத்துவ தேவாலயத்தின் அருகே தன் தாயுடன் சாலையை கடக்க நின்று கொண்டிருந்த சிறுவன் பிரசன்னா வண்டி வருவதைப் பார்க்காமல் திடீர் என்று சாலையின் குறுக்கே ஓடிய போது எதிரே வந்த வாகனத்தில் அடிப்பட்டுப் பலத்த ரத்த காயங்களுடன் விழுந்தான். உடனே அங்கிருந்த பொதுமக்கள் சிலர் சிறுவனை தூக்கிச் சென்று அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மிகவும் ஆபத்தான கட்டத்தை சிறுவன் பிரசன்னா கடந்தாலும் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறான்.


குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் கூலி தொழிலாளிகள் என்பதால் தங்களது பிள்ளையின் மருத்துவ செலவிற்கு ஆன ரூ.9 லட்சம் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில் ‘மிலாப்’ எனப்படும் பொதுமக்களிடம் இருந்து நன்கொடையைப் பெறும் அமைப்பு ஒன்று அவர்களுக்கு உதவ முன் வந்துள்ளது. அவர்கள் இந்தக் குழந்தைக்கென தனி ‘பேடிஎம்’ கணக்கு மற்றும் சிறுவனின் தந்தை சுரேந்திரன் வங்கிக் கணக்கை தங்களது அமைப்பின் பக்கத்தில் வெளியிட்டு மருத்துவ செலவிற்கான பணத்தை நன்கொடையாகத் திரட்டி வருகிறது. இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com