திருச்சியில் கள்ள நோட்டு: பெண் உள்பட இருவரிடம் விசாரணை

திருச்சியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக பெண் உள்பட இருவரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

திருச்சியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக பெண் உள்பட இருவரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் சந்தையில் கடந்த சில வாரங்களாக பெண் ஒருவர் ரூ. 2000 நோட்டு கொடுத்து காய்கறி வாங்கினாராம். அது கள்ள நோட்டாக இருக்கலாம் என வியாபாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அதே பெண் சந்தைக்கு வந்து ரூ. 2000 நோட்டு கொடுத்து காய்கறி வாங்க முயன்றபோது அவரை வியாபாரிகள் பிடித்து எடமலைப்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் அந்த நோட்டை வாங்கிப் பார்த்தபோது அது கள்ள நோட்டு எனத் தெரியவந்தது.
விசாரணையில் அந்தப் பெண் திருச்சி கொள்ளிடம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (38) என்பதும் அவரிடம் மற்றொரு ரூ. 2000 கள்ள நோட்டு இருந்ததும் தெரியவந்தது. அந்த நோட்டுகளை மணிகண்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கடனாக வாங்கிய பணம் என அப்பெண் தெரிவித்தாலும், போலீஸார் அதை நம்பவில்லை. கிருத்திகா அளித்த தகவலின் பேரில், திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதி விடுதியில் தங்கியிருந்த சென்னை சூளக்கரையைச் சேர்ந்த காதர்பாட்சாவை (40) பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கோவையில் ரூ. 2 லட்சத்துக்கு கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com