பிஎஸ்என்எல் ஊழியர்கள் இரண்டு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்குவது உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறவுள்ளது

மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்குவது உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறவுள்ளது என்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலர் எம்.கன்னியப்பன் வெளியிட்ட அறிக்கை: பிஎஸ்என்எல்-இல் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 2017 ஜனவரி 1- ஆம் தேதி முதல் ஊதிய மாற்றம் நடைபெற வேண்டும். அரசால் நியமிக்கப்பட்ட 3-ஆவது ஊதியக்குழு தனது பரிந்துரையில் பிஎஸ்என்எல்-க்கு எதிரான பல ஷரத்துக்கள் உள்ளன. அதனடிப்படையில் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஊதிய மாற்றம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனம் 2009-10-ஆம் நிதி ஆண்டு முதல் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இதனால் 3-ஆவது ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஊதிய மாற்றத்துக்கு தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.
எனவே, தில்லியில் கூடிய அனைத்து சங்கக் கூட்டத்தில், இந்த கொடுக்கும் சக்தி பிரிவில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதை வலியுறுத்தி தொலைத் தொடர்பு துறைக்கு எல்லா சங்கங்களும் கடிதம் எழுதின. ஆனால், இந்த கடிதத்துக்கு எவ்விதமான பதிலோ அல்லது பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை. 
இந்த 3-ஆவது ஊதிய மாற்றமானது 90 சதவீதம் பிஎஸ்என்எல்-இல் பணிபுரியும் ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான இறுதி ஊதிய மாற்றமாகும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு 90 சதவீதம் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவர். மூன்றாவது ஊதிய மாற்றம் பெறவில்லை எனில், 90 சதவீதம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஓய்வூதியத்தில் கடுமையான இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com