'சென்னையில் திருவையாறு' டிச. 18-இல் தொடக்கம்

லஷ்மன் ஸ்ருதி இசையகம் சார்பில் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 'சென்னையில் திருவையாறு' சங்கீத நாட்டிய விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள்

லஷ்மன் ஸ்ருதி இசையகம் சார்பில் டிசம்பர் 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 'சென்னையில் திருவையாறு' சங்கீத நாட்டிய விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:-
தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 'சென்னையில் திருவையாறு' சங்கீத நாட்டிய நிகழ்ச்சி டிசம்பர் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
அப்போது அரங்கத்திலிருந்து சென்னையின் முக்கியப் பகுதிகளுக்கு இரவு 7.15 முதல் இலவசமாகப் பேருந்து இயக்கப்படும். இதுதொடர்பான விவரங்களுக்கு 044-46664666 என்ற தொலைபேசி எண் அல்லது 
ரரர.நஆகப.இஞ.ஐச என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவலச மருத்துவ முகாம், இசைக்கருவிகள் விற்பனை அரங்கு , அறிவுத் திறன் போட்டி, உணவுத் திருவிழா ஆகியவை நடைபெறவுள்ளது. 
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவுக்குச் சென்று வருவதற்கான இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது.
'சென்னையில் திருவையாறு' நிகழ்ச்சியின் இறுதி நாளான டிசம்பர் 25-ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கலந்து கொள்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com