இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி: என்.எல்.சி. நிறுவனம் பெருமிதம்

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சியடைந்து தேசப் பணியில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நிறுவனமாக திகழ்வதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி: என்.எல்.சி. நிறுவனம் பெருமிதம்

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சியடைந்து தேசப் பணியில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நிறுவனமாக திகழ்வதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து என்.எல்.சி. நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது சிறப்பான திட்டமிடுதல், நிறுவனத் தலைவர் வழிகாட்டுதல் பழுப்பு நிலக்கரி உற்பத்தி, மின் உற்பத்தி மற்றும் இதர துறைகளில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. 
இந்த நிறுவனத்தின் மின் உற்பத்தி 31.3.2015 முதல் 1.12.2017 வரை 61 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்நிலையம் மூலம் 19 மடங்கு மின் உற்பத்தியை எட்டியுள்ளது. 
மேலும் 2014-15ஆம் நிதியாண்டின் வர்த்தகத் தொகை மற்றும் நிகர லாபம் ஆகியவற்றை ஒப்பிடும்போது 2016-17ஆம் ஆண்டில் முறையே, 42.50 சதவிகிதம், 50 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளது. 
மத்திய அரசுக்கு ரூ.4695 கோடி பங்கு ஈவுத்தொகை
மத்திய அரசுக்கு, பங்கு ஈவுத்தொகை மற்றும் பகிர்மான வரி என ரூ.4,695 கோடி வழங்கியுள்ளது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட தொகை கடந்த இரண்டு ஆண்டுகளில் 136.70 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.70.30 ஆக இருந்த ஒரு பங்கின் விலை, தற்போது 52.70 சதவிகிதம் உயர்ந்து ரூ.107.35 ஆக திகழ்கிறது. 2014-15ஆம் ஆண்டில் ரூ.9.42ஆக இருந்த ஒரு பங்கு ஈட்டிய வருவாயை, 2016-17ஆம் ஆண்டில் 50 சதவிகிதம் அதிகரிக்கச் செய்து ரூ.14.14 ஆக மாற்றியுள்ளது.
சந்தை முதலீட்டில் 39, முதலீட்டின் மீது பெற்ற வருவாய் தொகையில் 47.93, பங்கு ஈவுத்தொகை வழங்குவதில் 139 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது, ரூ.469.76 கோடியாக இருந்த பங்கு ஈவுத்தொகை, கடந்த ஆண்டு ரூ.1,121.97 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய திட்டங்களுக்கான முதலீட்டை குறிக்கும் முதலீட்டு அளவு 81.21 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மொத்த செலவில் ஊழியர்களுக்கான செலவின் பங்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் 19.79 சதவிகிதம் குறைந்துள்ளது. 
மேற்கண்ட வளர்ச்சிகள் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சரத்குமார் ஆச்சார்யாவின் சிறப்புமிக்க வழிகாட்டுதலின் மூலம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com