எரிவாயு உருளை விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம்: ராமதாஸ் கண்டனம்

எரிவாயு உருளை விநியோகத்துக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
எரிவாயு உருளை விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம்: ராமதாஸ் கண்டனம்

எரிவாயு உருளை விநியோகத்துக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சமையல் எரிவாயு உருளைகளை விநியோகிக்கக் கூடுதல் கட்டணம் கேட்டு, சமையல் எரிவாயு முகமைகளின் பணியாளர்கள் கொடுக்கும் தொல்லை அதிகரித்து வருகிறது.
சென்னையில் 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளை ரூ.756-க்கும், மானிய விலையில் ரூ.483.69-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மானிய விலையிலான சமையல் உருளையை இல்லங்களுக்கு கொண்டு சென்று விநியோகிக்க, அதிகபட்ச விற்பனை விலையுடன் ரூ.50 முதல் ரூ.70 வரை கூடுதலாக வழங்க வேண்டும் என்று பணியாளர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர். 
எரிவாயு ரசீதில் குறிப்பிட்டப்பட்டுள்ள தொகையை மட்டுமே வழங்க முடியும் என்றால், அதை பணியாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. கூடுதல் கட்டணம் தர மறுக்கும் இல்லத்தரசிகளை கடுமையான வார்த்தைகளில் பேசுவதுடன், கொண்டு வந்த எரிவாயு உருளையை விநியோகிக்காமல் திரும்பி எடுத்துச் செல்கின்றனர்.
இது தொடர்பாக எரிவாயு உருளை நிறுவனங்களிடம் புகார் அளித்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து வெளி ப்படைத்தன்மை இல்லாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.420.21 ஆக இருந்த மானிய எரிவாயு உருளையின் விலை இப்போது ரூ.483.69 ஆக உயர்ந்து விட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எரிவாயு உருளை விலை ஒருபுறம் உயர்த்தப்படும் நிலையில், மறுபுறம் கூடுதல் கட்டணமாக ரூ.70 வரை வசூலிப்பது இரட்டைக் கொள்ளை ஆகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com