ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அத்துமீறி நுழைந்த கல்லூரி மாணவர் கைது

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அத்துமீறி நுழைந்ததாக பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அத்துமீறி நுழைந்ததாக பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
இந்த பயிற்சி மையத்தில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை பயிற்சி மையத்துக்கு 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ராணுவ சீருடையில் வந்தார். அவரை ராணுவ அதிகாரி என நினைத்த பாதுகாப்பு ராணுவ வீரர்கள், சோதனை எதுவும் செய்யாமல் மையத்துக்குள் அனுமதித்தனராம்.
மையத்துக்குள் பாதுகாப்பு முக்கியத்துவம் நிறைந்த பகுதிக்குச் சென்ற அந்த இளைஞரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரது அடையாள அட்டை, விவரங்களை கேட்டனர். 
அப்போது முன்னுக்குப் பின் முரணாக அந்த இளைஞர் பதில் கூறியதால், அவரை ராணுவ அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர், மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் நிதிஷ் (19) என்பதும், வடபழனியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் அவர் ராணுவ முகாமை சுற்றி பார்க்கவும், ராணுவ சீருடை அணியவும் ஆசைப்பட்டு, அங்கு வந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து ராணுவ அதிகாரிகள், நிதிஷை பிடித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து நிதிஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிதிஷின் தந்தை ராஜசேகர், இந்திய ராணுவத்தில் கர்னலாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com