ஒக்கி புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரியில் வீடுவீடாக ஆய்வு: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு! 

தென் தமிழக கடல் பகுதிகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கிய ஒக்கி புயலின் தாக்கம் குறித்து கன்னியாகுமரியில் வீடுவீடாக ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒக்கி புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரியில் வீடுவீடாக ஆய்வு: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு! 

புதுதில்லி: தென் தமிழக கடல் பகுதிகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கிய ஒக்கி புயலின் தாக்கம் குறித்து கன்னியாகுமரியில் வீடுவீடாக ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மாநில நிதி அமைச்சர்களின் மாநாட்டில் பங்கு பெறுவதற்காக தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தில்லி சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தென் தமிழக கடல்பகுதிகளை ஒக்கி புயல் கடும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதன் முழுமையான தாக்கம் குறித்து அறியும் பொருட்டு கன்னியாகுமரியில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்படும். இதன் மூலம் உடைமைகள் குறித்த சேதமானது துல்லியமாகத் தெரிய வரும். இதன் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல்வர் மூலம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். எந்த காரணத்தினாலும் மாநில அரசின் உரிமைகள் வீட்டுக் கொடுக்கப்பட மாட்டாது  

ஒக்கி புயலினைப் பொறுத்த வரை  இதுவரை 14 மீனவர்கள் உயிரிழந்ததாகவும், 40 படகுகள் மற்றும் 433 மீனவர்களைக் காணவில்லை என்று மத்திய உள்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.    

இவ்வாறு கூறிய அமைச்சர் ஜெயகுமாரிடம், ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பு பற்றிக் கேட்ட பொழுது, அவையெல்லாம் கருத்துக் கணிப்புகள் அல்ல; கருத்துத் திணிப்புகள் என்று அவர் பதிலளித்தார்.

இறுதியாக மத்திய அரசின் வரிச் சீர்திருத்தங்கள் மூலம் உண்டாகும் வரி இழப்பினை ஈடுகட்ட தமிழகத்திற்கு ரூ.2000 கோடி நிதி கேட்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com