ராஜஸ்தானிலிருந்து சென்னை திரும்பிய தமிழக போலீசார் 

காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நாதுராமை பிடிக்க சென்ற தமிழக போலீசார் இன்று சென்னை திரும்பினர்.
ராஜஸ்தானிலிருந்து சென்னை திரும்பிய தமிழக போலீசார் 

காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நாதுராமை பிடிக்க சென்ற தமிழக போலீசார் இன்று சென்னை திரும்பினர்.

சென்னை கொளத்தூரில் நகைக்கடை ஒன்றில் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடந்த நகைக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகளைப் பிடிப்பதற்காக, கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், தலைமை காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் முதல்நிலைக் காவலர் சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தான் சென்றனர். 

அங்கு பாலி மாவட்டத்தில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்துள்ளார். மற்ற காவலர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழக காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய சென்னை காவல் இணை ஆணையர் சந்தோஷ் தலைமையிலான தனிப் படையினர் ராஜஸ்தானுக்குச் சென்றனர். 

இந்நிலையில், தமிழக போலீசார் அனைவரும் ராஜஸ்தானிலிருந்து இன்று சென்னை திரும்பினர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த சென்னை திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com