கன்னியாகுமரியில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம்

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகத்தை அங்கு அமைக்க மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி
ஒக்கி புயல், கனமழை பாதிப்புகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
ஒக்கி புயல், கனமழை பாதிப்புகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகத்தை அங்கு அமைக்க மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி கேட்பது என தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. புயலால் அம்மாவட்டத்தில் ஏற்பட்ட பயிர்பாதிப்பு , விவசாய நிலங்களின் சேதங்களை மதிப்பிடும் பணியை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கை தமிழக முதல்வரிடம் ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், புயலால் பாதிக்கப்பட்ட 98.93 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகள் 75.46 கி.மீ. தூர மாநில நெடுஞ்சாலைகள், மின் கட்டமைப்புகள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை நிரந்தரமாகச் சீர் செய்திட உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசை வலியுறுத்துவது.
ஒக்கி புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு மத்திய அரசை ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ள நிலையில், மாநிலப் பேரிடர் நிதிக்கும் மேலாக தேவைப்படும் கூடுதல் நிதியை, மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண, தொலைத் தொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன் பிடித் துறைமுகம் ஒன்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைத்திட மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியுதவியைக் கோருவது.
அதுபோல, சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் உதவியைக் கோரவும்ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,அமைச்சர்கள்,அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com