சுருளி அருவியில் பேட்டரி கார் இயங்கத் தொடங்கியது: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இயங்காமல் இருந்த பேட்டரி கார் புதன்கிழமை முதல் இயங்கத் தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளன
சுருளி அருவியில் புதன்கிழமை முதல் இயங்கத் தொடங்கிய பேட்டரி கார்.
சுருளி அருவியில் புதன்கிழமை முதல் இயங்கத் தொடங்கிய பேட்டரி கார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இயங்காமல் இருந்த பேட்டரி கார் புதன்கிழமை முதல் இயங்கத் தொடங்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இங்குள்ள வாகன நிறுத்தத்திலிருந்து அருவிப் பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. எனவே முதியோர், ஊனமுற்றோர் மற்றும் குழந்தைகளுக்காக மேகமலை வன உயிரின சரணாலய நிர்வாகம் சார்பில் பேட்டரி கார் இயக்கப்பட்டது. இதில் ஒரு நபருக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு பேட்டரி கார் பழுதடைந்ததால் அது நிறுத்தப்பட்டது. இதனால் வயதானவர்கள், ஊனமுற்றோர் மற்றும் குழந்தைகள் அவதியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து பேட்டரி காரை இயக்க பல முறை கோரிக்கை விடுத்தும் சரணாலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வில்லை என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். இதற்கு, மாவட்ட நிர்வாகத்திற்கும், சரணாலய நிர்வாகத்திற்கும் இடையே நடைபெறும் பனிப்போரே காரணம் என்று வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனிடையே மேகமலை வன உயிரின சரணாலயத்துக்கு புதிய வார்டன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து புதன்கிழமை முதல் பேட்டரி காரை வனத்துறையினர் அருவிப் பகுதியில் இயக்கினர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து மதுரையிலிருந்து சுற்றுலா வந்த ரவி- வனஜா தம்பதியினர் கூறியதாவது: சுருளி அருவிக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் வந்துள்ளோம். வனத்துறையினர் கட்டணம் வசூலிக்கின்றனர். அதே நேரத்தில் இங்கு கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது. இங்கு குழந்தைகள் பூங்கா அமைத்து விளையாட்டு உபகரணங்களை வைக்க வேண்டும் என்றனர். 
சுருளி அருவியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி நாராயணசாமி கூறியது: இங்கு சரணாலய நிர்வாகத்தினர் நுழைவுக் கட்டணம் வசூலிக்கின்றனர், ஆனால் அடிப்படை வசதிகளை செய்ய வில்லை. எனவே கூடுதல் பணியாளர்களை நியமித்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com