'ரஜினிகாந்துக்கு அரசியல் சரிப்பட்டு வராது'

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் வெகுளியானவர் எனவும், தற்போதுள்ள அரசியல் அவருக்கு சரிப்பட்டு வராது என பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 
'ரஜினிகாந்துக்கு அரசியல் சரிப்பட்டு வராது'

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் வெகுளியானவர் எனவும், தற்போதுள்ள அரசியல் அவருக்கு சரிப்பட்டு வராது என பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். 
ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அரசியலில் எதுவும் நடைபெறலாம் என்பதால், எதிர்காலத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே பாஜக.வுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். பாஜகவுடன் மற்ற கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளன.
ஆர்.கே.நகர் தோல்வி என்பது ஒரு விபத்து. அதை நாங்கள் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி செயல்படுவோம். ஒரு இடைத்தேர்தலை வைத்து அதிமுகவை எடைபோட முடியாது. ஆளும் கட்சி மீது அதிருப்தி என்பது மக்களிடம் இல்லை. எதிர்க் கட்சிகளிடம் மட்டுமே உள்ளது. அதிமுகவை யாராலும், எப்போதும் அழிக்க முடியாது. 
சட்டசபையில் 90 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தி.மு.க.வே எங்களுக்கு சவால் கிடையாது. எனவே, புதிய எம்.எல்.ஏ.வால் எந்தப் பிரச்னையும் இருக்காது. மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக வாய்ப்பு இல்லை என்று நாங்கள் கூறியதை யாரும் நம்பவில்லை. தற்போது, அவரது சகோதரர் மு.க. அழகிரியே கூறியுள்ளார். 
அரசியலில் பல சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். ரஜினி வெகுளியானவர். அவருக்கு தற்போதுள்ள அரசியல் சரிப்பட்டு வராது. அனைத்து கட்சிகளிலும் அவரது ரசிகர்கள் இருக்கின்றனர். அவர், அரசியல் பணியை தாண்டிவிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்திருந்தால், அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். அவரது வயது, அவரது குணம் இப்போதுள்ள அரசியலுக்கு சரிவராது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com