தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு: குறைந்த கட்டணத்தில் பயிற்சி: இலவச கருத்தரங்கம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்போர் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு குறைந்த கட்டணத்தில் முழு நேரம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்போர் பதவிகளுக்கான தேர்வுகளுக்கு குறைந்த கட்டணத்தில் முழு நேரம் மற்றும் பகுதி நேர பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் சத்தியஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான அறிவிப்பு டிசம்பர் 28-ஆம் தேதி வெளிவந்துள்ளது. இதில் 6 ஆயிரத்து 140 பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வுகள் 2018 மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளன.
இதற்கான முழு மற்றும் பகுதி நேரப் பயிற்சியை ஐஏஎஸ் தேர்வு பயிற்சியில் முன்னணி வகிக்கும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, டிஎஸ்பி பரத் நேரடி ஆலோசனையில் வரும் ஜன.10 முதல் நடத்துகிறது. இப்பயிற்சி குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும். புதிய பாடத் திட்டத்தின் படி பயிற்சி மற்றும் மாதிரி தேர்வு, தினம் ஒரு தேர்வு நடத்தப்படும்.
பயிற்சி நேரம்: மாணவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் பயிற்சி பெறுவதற்காக 3 தொகுதிகளாக இப்பயிற்சி அளிக்கப்படும். வார நாள்களில் வகுப்பு நேரம் ( திங்கள் முதல் வெள்ளி வரை) முதல் தொகுதி நேரம்- காலை 7 முதல் 9 மணி வரை, 2-ஆவது தொகுதி நேரம்- மாலை 6 முதல் 8 வரை. வார இறுதி நாள்களில் (சனி, ஞாயிறு) தொகுதி 3- பிற்பகல் 1 முதல் 7 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
31-இல் இலவச கருத்தரங்கம்: வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) காலை 10 மணிக்கு இலவச கருத்தரங்கம் கிங்மேக்கர்ஸ் ஐ ஏஎஸ் அகாதெமியில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக டிஎஸ்பி. பரத் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான உத்திகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார். மேலும் தகவல்களுக்கும், இலவச பதிவுக்கும் செல்லிடப்பேசி எண் 9444227273.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com