ஜனவரி 7 -இல் திமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்

திமுக எம்.எல். ஏ.-க்கள் கூட்டம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.

திமுக எம்.எல். ஏ.-க்கள் கூட்டம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.
 சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 8 -ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
 அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 7 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை திமுக கொறடா அர. சக்கரபாணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com