12-ஆம் தேதி புதுவையில் ஜல்லிக்கட்டு: 100 காளை மாடுகள், 50 வீரர்கள் பங்கேற்பு

புதுச்சேரியில் வரும் 12-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அதில் 100 காளை மாடுகள், 50 வீரர்கள் பங்கேள்கின்றனர் என ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் புவனேஸ்வரன் தெரிவித்துளளார்.
12-ஆம் தேதி புதுவையில் ஜல்லிக்கட்டு: 100 காளை மாடுகள், 50 வீரர்கள் பங்கேற்பு

புதுச்சேரியில் வரும் 12-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அதில் 100 காளை மாடுகள், 50 வீரர்கள் பங்கேள்கின்றனர் என ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் புவனேஸ்வரன் தெரிவித்துளளார்.

அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழரின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆயிரம் ஆண்டுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சில அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகி ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி இருந்தன. 

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் இந்த தை எழுச்சி விளைவாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வந்தது. மேலும், காளை மாடுகளும் காட்சிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. இதற்காக மாணவர்கள், இளைஞர்கள், தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுப் பேரவை
மேலும் புதுவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக நானும் , செயலாளராக வழக்கறிஞர் லெனின்துரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். 

வரும் 12-ஆம் தேதி தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இதில் கம்பம்பட்டு, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100 காளை மாடுகளும், 50 வீரர்களும் கலந்து கொள்வார்கள். 

இதற்காக முதல்வர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். புதுவையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்துதரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பங்கேற்க வேண்டும்.

மேலும் புதுவை இளைஞர்களுக்காக வழுக்குமரம் ஏறுதல், தப்பாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் துவக்கி வைக்கவுள்ளனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நிர்வாகிகளும்ம் கலந்து கொள்கிறார்கள். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இப்போட்டிகள் நடைபெறும். 

இனிமேல் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றார். செயலாளர் லெனின்துரை மற்றும் நிர்வாகிகள், மாணவர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com