புதுச்சேரி: துறைமுக முகத்துவாரத்தை துரிதமாக தூர் வாரக் கோரி மீனவர்கள் சாலை மறியல்

புதுச்சேரி மீன்பிடித் துறைமுக முகத்துவாரம் தூர் வாருவதில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்தும், துரிதமாக தூர் வார வலியுறுத்தியும்

புதுச்சேரி மீன்பிடித் துறைமுக முகத்துவாரம் தூர் வாருவதில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்தும், துரிதமாக தூர் வார வலியுறுத்தியும் மீனவர்கள் வியாழக்கிழமை கடலூர் சாலையில் மறியல் செய்தனர். மொத்தம் 100 க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி மீன்பிடிதுறைமுக முகத்துவார நுழைவு வாயிலில் படகுகள் மீன்பிடிக்க துறைமுகத்திலிருந்து கடலுக்குள்ளேயும், கடலில் மீன்பிடித்த பின்னர் கடலில் இருந்து துறைமுகத்துள்ளேயும் வரும் பொழுதும் ஆண்டின் சில மாதங்களில் நீரோட்டம் காரணமாக முகத்துவாரத்தில் மண் குவிவது இயற்கையானது.

கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான நடைமுறைப்படி தூர் வாரப்படாமல் ட்ரட்ஜர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா  என்ற மத்திய அரசின் கழகத்தின் மூலம் மண் வார துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஏற்பாடு செய்தார்.

அந்த தூர் வாரும் கப்பல் சரிவர  இயங்காதால் மணலை தூர்வார வில்லை. இதனால் மீனவர்கள் கடந்த 5 மாதமாக கடலுக்கு செல்லவில்லை . இதனால் துணை நிலை ஆளுநர்   எடுத்த தன்னிச்சையான முடிவால் கடந்த 5 மாதங்களாக தூர் வார முடியவில்லை. இதனால் தாங்கள் பாதிப்படுதாகவும், விரைவில் தூர்வார வேண்டும் என வலியுறுத்தியும் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் .

ஏறக்குறைய அரைமணிநேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com