ரூ.5,700 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ.5,700 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ரூ.5,700 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ.5,700 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் பேசியது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 4,577 கி.மீ. சாலை, பாலப் பணிகள் ரூ.4,056 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. ரூ. 241 கோடி மதிப்பிலான சாலை, பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழைநீர் வடிகால், தெருவிளக்குகள், பூங்காக்கள் பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகள் ரூ.2,055 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகருடன் புதிதாக இணைக்கப்பட்ட மாதவரம், நெற்குன்றம், நொளம்பூர், காரம்பாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ஒக்கியம்- துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், இடையான்சாவடி, சடையான்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், சின்னசேக்காடு, மணலி, பள்ளிக்கரணை, முகலிவாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், புழல் ஆகிய 27 பகுதிகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ரூ.830 கோடி மதிப்பீட்டில் இணைக்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் ரூ.5,700 கோடி மதிப்பில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பின் கடன் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com