தனிமனித ஒழுக்கம் பெற சமயத்தைச் சார்ந்து வாழ வேண்டும்: ஞானசம்பந்த சுவாமிகள்

தனிமனித ஒழுக்கத்தைப் பெற சமயத்தை சார்ந்து வாழ வேண்டும் என்று தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கூறினார்.
தனிமனித ஒழுக்கம் பெற சமயத்தைச் சார்ந்து வாழ வேண்டும்: ஞானசம்பந்த சுவாமிகள்

தனிமனித ஒழுக்கத்தைப் பெற சமயத்தை சார்ந்து வாழ வேண்டும் என்று தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கூறினார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் இளைய சந்நிதானமாக புதன்கிழமை பட்டம் பெற்ற பிறகு, முதன்முறையாக திருவாரூர் கமலை ஞானபிரகாச தேசிக சுவாமிகள் ஆலயத்தில் தரிசனம் பெற்றபோது, தினமணிக்கு அவர் அளித்த பேட்டி:
தருமபுர ஆதீனத்தின் இளைய சந்நிதானமாக புதன்கிழமை பொறுப்பேற்ற பிறகு, முதல் யாத்திரையாக திருவாரூர் ஸ்ரீகமலை ஞான பிரகாச தேசிக சுவாமிகள் ஆலயத்துக்கு சென்று வர குருமகா சந்நிதானம் அனுப்பி வைத்துள்ளார். நாடு சுபிட்சமாக இருக்க தனிமனித ஒழுக்கம் தேவை. தனிமனித ஒழுக்கமே நாட்டின் வளமைக்கு வித்திடுவதாக அமையும்.
பள்ளிப் பாடங்களில் நீதி போதனைகளை கூறும் புறநானூறு போன்ற 18 மேல்கணக்கு, கீழ்கணக்கு நூல்களை பாடத்திட்டத்தில் வைத்து போதித்தால், அடிப்படையிலிருந்து மாணவர்கள் நல்லவர்களாக வளர்வார்கள். சமயம் சார்ந்த கல்வியாக இருக்க வேண்டும். சமயத்தை சாராத யாரும், தனிமனித ஒழுக்கத்தை பெற முடியாதவர்களாக இருப்பார்கள். சமயத் துறையைச் சார்ந்து அனைவரும் வாழ வேண்டும்.
மூலாதாரமாக திருவாரூர் விளங்குவதாலும் யோக நெறி பரப்பும் நிலையில் இத்தலம் சிறப்புமிக்கது. மனுநீதி மன்னன் கடைப்பிடித்த அரசு நெறிகளை, சான்றாண்மையை, இறையாண்மையுடைய பின்வரும் அரசு பின்பற்ற வேண்டும். தன் சொந்தத்தால், கள்வரால், விலங்குகளால், பகைவரால், தீர்த்து ஆள்பவன் அரசன் என்று மனுநீதி கண்ட புராணத்தில் சேக்கிழார் பெருமான் காட்டுகிறார். அவற்றை கடைப்பிடித்து வாழ வேண்டும்.
தருமபுர ஆதீனம் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட சமயம் மற்றும் நீதிநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சைவத்தையும், தமிழையும் பரப்ப, 24-ஆவது மகா சந்நிதானம் காலம் தொட்டு, ஞானசம்பந்தம் என்ற மாத இதழை நடத்தி வருகிறோம். உலகலாவிய தமிழையும் சைவத்தையும் வளர்க்க அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் என்பது இப்போது மகா சந்நிதானத்தால் தொடங்கியுள்ளோம்.
கோயில்களில் தடையின்றி பூஜைகள் நடைபெற வேண்டும். அப்போது தான் நாடு சுபிட்சமாக இருக்கும். கோயில்களில் திருப்பூஜைகள் தொடர ஆகம சாலைகளை தொடங்கியது தருமபுர ஆதீனம். இதேபோல் இசைவழியில் தமிழை வளர்க்க ஓதுவார் மூர்த்தி பாடசாலையை உருவாக்கியது தருமபுர ஆதீனமே என்றார் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com