அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 45 லட்சம் வரை வசூலித்து, மோசடியில் ஈடுபட்ட இளைஞரை திருவள்ளூர் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸôர் கைது செய்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 45 லட்சம் வரை வசூலித்து, மோசடியில் ஈடுபட்ட இளைஞரை திருவள்ளூர் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸôர் கைது செய்தனர்.
திருத்தணியைச் சேர்ந்த முரளியிடம் கடந்த 2015-ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் (27), மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 8,60,000 வசூலித்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லையாம். இதேபோல், திருத்தணியைச் சேர்ந்த நாகராஜிடம் ரூ. 7,17,000, சோளிங்கரைச் சேர்ந்த முனிகிருஷ்ணனிடம் ரூ. 6,60,000 என 8 பேரிடம் ரூ. 45 லட்சம் வரை பிரித்திவிராஜ், மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. வேலை கிடைக்காததால், பணத்தை திரும்பக் கேட்டவர்களுக்கு பிரித்திவிராஜ் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாம்சனிடம் கடந்த மாதம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸôர் வழக்குப் பதிந்து, பிரித்திவிராஜை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com