தீபா தொடங்கும் கட்சியின் கொடி கோவையில் அறிமுகம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா தொடங்கவுள்ள புதிய அரசியல் கட்சியின் கொடியை, கோவையில் அக்கட்சியின் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினர்.
தீபா தொடங்கும் புதிய அரசியல் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்துகிறார் அதிமுக தொழிற்சங்க மாநிலத் தலைவர் ஜெயபால்.உடன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன், நூர்முகமது, சிங்கை நகர ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்

தீபா தொடங்கவுள்ள புதிய அரசியல் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்க மாநிலத் தலைவருமான ஜெயபால் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம், கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, கட்சியின் புதிய கொடியை அறிமுகப்படுத்திய அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தற்போது ஜெ.தீபா பேரவையில் சுமார் 11 லட்சம் பேரும், கட்சியில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் இணைந்துள்ளனர். புதிய கட்சி குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை தீபா பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியிட உள்ளார். தற்கு முன்னதாக, மாநிலம் முழுவதும் ஒரு சில மாவட்டங்களுக்கு தீபா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com