முதல்வர் ஆகிறாரா சசிகலா?

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா தலைமையில்
முதல்வர் ஆகிறாரா சசிகலா?

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா தலைமையில் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 முன்னதாக, அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம், சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நடந்தது. இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் மீண்டும் சசிகலா தலைமையில் வரும் 5-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 இந்தக் கூட்டத்தில் சில முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக சட்டப் பேரவை மூத்த உறுப்பினர்கள் பேசுவார்கள் எனவும், இதைத் தொடர்ந்து சசிகலாவும் உரையாற்ற வாய்ப்பிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே நாளை கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஊருக்குச் செல்ல இருந்த உறுப்பினர்களை சென்னையில் தங்கியிருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஊருக்குச் சென்றவர்களையும் உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால், தொகுதிகளில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான விவரங்கள் பெறவே பேரவை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகிகளும் அழைக்கப் பட்டிருப்பதாகவும் பேரவை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த புதன்கிழமை சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "ஆளுநர் உரையில் பல நல்ல திட்டங்கள் உள்ளன. அதைப் பாராட்ட எதிர்க்கட்சிகளுக்கு மனமே இல்லை' என்றார்.
இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், எதிர்க்கட்சிகள் மனதாரப் பாராட்டவில்லை என்று முதல்வர் கூறினார். இப்போது பாராட்டுகிறேன். முதல்வராக நீங்களே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றார். அப்போது, திமுக எம்எல்ஏக்கள் சிரித்தனர். ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் அமைதி காத்தனர்.
சட்டப் பேரவையில் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து புகழேந்தி பேசும்போது, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்வியமாகப் பேசினார். இதையடுத்து, தனது பதில் உரையில், பாலப் பருவத்தில் பள்ளிக்கூடத்தில் இருப்பதுபோல புகழேந்தி அவையில் கையைக் கட்டிக் கொண்டு பேசினார். பணிவுக்குப் பணிவு காட்டும் என்னையே (ஓ.பன்னீர்செல்வம்) விஞ்சிவிட்டார் என்றார் பன்னீர்செல்வம்.
புகழேந்தி செய்ததை கேலி செய்யாமல் நகைச்சுவையாகவே முதல்வர் குறிப்பிட்டது அவையில் எம்எல்ஏக்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  
இந்நிலையில், நாளை அதிமுக பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அதிமுக தலைமையின் இந்த திடீர் நடவடிக்கையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com