மெரீனாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வரும்போது, ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் நினைவாக, மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மரக்கன்றுகளையும் நட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மெரீனா கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷனால் பயன் இருக்காது. சென்னை கடற்கரை முழுவதும் கச்சா எண்ணெய் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. ஆனால், பேரவையில் மீன்வளத் துறை அமைச்சர் எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கூறினார்.
ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் நினைவாக, மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதனை அமைக்க தற்போதைய அரசு முன்வராவிட்டால், திமுக ஆட்சிக்கு வரும்போது அமைக்கப்படும்.
சர்க்கரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதும், எரிவாயு உருளையின் விலையை ரூ.66 வரை உயர்த்தியிருப்பதும் வருத்தம் அளிக்கக்கூடியது என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com