அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா இன்று ஆலோசனை: தொகுதிப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பு

தொகுதிகளில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆலோசனை நடத்துகிறார்.
அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா இன்று ஆலோசனை: தொகுதிப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பு

தொகுதிகளில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
சட்டப் பேரவை கூட்டத் தொடரின்போது, ஜனவரி 27-இல் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய அவர், இப்போது மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
முக்கிய பிரச்னைகள்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் வரும் 24-இல் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
மேலும், தேர்தலின்போது அளித்திருந்த வாக்குறுதிகள், அவற்றின் இப்போதைய நிலைமை உள்ளிட்டவை தொடர்பாக எம்எல்ஏக்களிடம் சசிகலா கேட்டறியவுள்ளார். அதுதொடர்பான அறிக்கைகளையும் அவர்களிடம் இருந்து பெற்று, தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வராக வலியுறுத்தல்: இதேபோல், சசிகலா முதல்வராக வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைகள்-வேண்டுகோள்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் பேசக் கூடும் என்றாலும், அதில் இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்படாது எனத் தெரிகிறது.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமையே சென்னைக்கு வந்துள்ள அதிமுக எம்எல்ஏக்கல் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு ஆலோசகர் ராஜிநாமா, முதல்வரின் செயலர்கள் விடுவிப்பு போன்ற பல்வேறு செய்திகளுக்கு நடுவே, இந்தக் கூட்டம் நடைபெறுவதால் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com