அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 905 காளைகள், 972 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

மதுரை அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் 905 காளைகள், 972 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்காக தயார் நிலையில் உள்ள வாடிவாசல்.
அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்காக தயார் நிலையில் உள்ள வாடிவாசல்.

மதுரை அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் 905 காளைகள், 972 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவுக்காக வாடிவாசல், பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரி உள்ளிட்ட பணிகள் முடிவடைந்தன. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை மாலை வரை 905 காளைகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
972 பேர்: இதேபோல், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், சேலம், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த 1,250 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 1,008 பேர் மருத்துவ பரிசோதனைக்கு வந்தனர். உடல்தகுதி அடிப்படையில் 972 பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இவர்களுக்கான இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இன்று காலை நடத்தப்படும்.
மருத்துவக் குழு: மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரபணிகள் துணை இயக்குநர் அர்ஜூன்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில் 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் தாற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் 2 பேர், மயக்கவியல் மருத்துவர், எலும்பு மருத்துவர், பொது மருத்துவர்கள் 6 பேர், செவிலியர்கள், அலுவலர்கள் உள்பட 63 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன. மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின்பேரில் துணை ஆணையர் ஆனந்தகுமார், உதவி ஆணையர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் ஆயுதப்படை, சிறப்புப்படை உள்பட 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றுப் பாதையில் போக்குவரத்து: ஜல்லிக்கட்டு நடப்பதையொட்டி காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விமான நிலையம் என அவனியாபுரம் நகர் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை புறவழிச் சாலை வழியாக செல்லும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

 பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com