ஜாதி ஒழிப்பு தீர்மானத்தை திமுக, இடதுசாரிகள் கூட நிறைவேற்ற முடியாது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் அரசியல் வாக்கு வங்கியை கருத்தில் கொள்வதால் ஜாதி ஒழிப்பில் உடன்பாடு கொண்ட திமுக, இடதுசாரி கட்சிகளால் கூட ஜாதியை

மதுரை: தமிழகத்தில் அரசியல் வாக்கு வங்கியை கருத்தில் கொள்வதால் ஜாதி ஒழிப்பில் உடன்பாடு கொண்ட திமுக, இடதுசாரி கட்சிகளால் கூட ஜாதியை ஒழிப்போம் என பகிரங்கமாக தீர்மானம் நிறைவேற்றமுடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
  மதுரையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு விழா, தி.க.தலைவர் கி.வீரமணி 84ஆவது பிறந்தநாள் மற்றும் பிரசார பயண ஊர்தி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். பிரசார வாகன சாவியைப் பெற்றுக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  விழாப் பேருரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தொல். திருமாவளவன் பேசியது: தனக்கு என தனி சமூக நெருக்கடி இல்லாத நிலையில், சமூக மேம்பாட்டுக்காக பொதுவாழ்க்கைக்கு வந்தவர் பெரியார். தமிழகத்தில் அரசியல் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல் சமூக நீதிக்காக போராடும் இயக்கம் திராவிடர் கழகம்.
 திமுக, இடதுசாரிகள் கட்சிகள் கூட ஜாதி ஒழிப்பில் உடன்பாடு கொண்டிருந்தாலும் அவர்களால் ஜாதியை ஒழிப்போம் என பகிரங்கமாக தீர்மானத்தை நிறைவேற்றமுடியாது. அரசியல் வாக்கு வங்கிக்காக சில கொள்கைகளில் அரசியல் கட்சிகள் சமரசம் செய்வது வழக்கமாகும்.
 திராவிடர் கழக மேடையில் எங்களைப் போன்றோருக்கு அளிக்கப்படும் சுதந்திரம், மற்ற அரசியல் கட்சிகளின் மேடையில் இருப்பதில்லை. பெரியார் கொள்கை எனில் அது சமூக நீதி, பெண் விடுதலை, சுயமரியாதை என்பதையே குறிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com