திருச்சி விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல்: இருவர் கைது

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 1.25 கிலோ தங்க நகைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல்: இருவர் கைது

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 1.25 கிலோ தங்க நகைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து எர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை வழியாக திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்திவருவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிகாரிகள் திருச்சி வந்த விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த முகம்மது சுலைமான் (25), ஜைனுலாபிதின் (27) ஆகியோரிடம் மேற்கொண்ட சோதனையில், சுமார் 500 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, அவர்கள் வந்த விமானத்தையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, இருவரும் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் 750 கிராம் நகைகள், தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 1.25 கிலோ தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட இருவரும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
யாருக்காக தங்கம் கடத்திவரப்பட்டது, தங்கம் கடத்தலுக்கு துணைபோனவர்கள் யார்? மறைத்துவைக்கப்பட்ட தங்கக் கட்டிகளை எடுத்து கொடுப்பது யார்? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com