ஜெயலலிதா எண்ணங்களுக்கு விரோதமான செயல் அரங்கேறியுள்ளது: ஸ்டாலின்

ஜெயலலிதா எண்ணங்களுக்கு விரோதமான செயல் அரங்கேறியுள்ளது: ஸ்டாலின்

மக்கள் மற்றும் ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு விரோதமாக ஒரு செயல் அரங்கேறியுள்ளது என தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.

மக்கள் மற்றும் ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு விரோதமாக ஒரு செயல் அரங்கேறியுள்ளது என தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழ்நாட்டு மக்கள் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அதிமுகவை ஆளுங்கட்சியாகவும், திமுகவை பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாகவும் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆளுங்கட்சியான அதிமுகவுக்கும், எதிர்க் கட்சியான திமுகவுக்கும் 1.1 சதவீதம் ஓட்டுகள்தான் வித்தியாசம். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வாக்களித்தனர். ஆனால், மக்களின் எண்ணத்திற்கு விரோதமாக இன்று (பிப்.5) ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்னும் சொல்லவேண்டுமானால், முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றபோது, ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் முதல்வராக நியமித்தார்.
அதேபோல் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நீண்ட நாள்கள் இருக்கும் நிலை ஏற்பட்டபோதும் பன்னீர்செல்வம்தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவுக்கு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பிலும் எந்த ஒரு பதவியையும் கொடுக்கவில்லை. கட்சியிலும் எந்த ஒரு பொறுப்பையும் வழங்கவில்லை.
ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக, மக்கள் விரோத செயலாக, ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு விரோதமான ஒரு சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. திமுகவை பொறுத்தவரை இந்த மக்கள் விரோத செயலை ஜனநாயக அடிப்படையில் தேர்தலில் சந்திப்போம் என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com