முதல்வரை மாற்ற வேண்டிய அவசியத்தை விளக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டிய அவசியத்தை அதிமுக விளக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
முதல்வரை மாற்ற வேண்டிய அவசியத்தை விளக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டிய அவசியத்தை அதிமுக விளக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
இதுகுறித்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது: அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் உள்கட்சி விவகாரம் என்றாலும், 2 மாதங்களாக முதல்வராக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டிய அவசரம், அவசியம் என்ன? என்பதை அதிமுக விளக்க வேண்டும்.
இது அக்கட்சியின் கடமை மட்டுமன்றி, மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இடைத்தேர்தலில் சசிகலாவை எதிர்த்து தமாகா போட்டியிடுமா இல்லையா என்பது குறித்து முறையாக தெரிவிக்கப்படும்.
சசிகலா முதல்வரானால் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றம் குறித்து உடனடியாக கூற எதுவுமில்லை. முறையாக தேர்தல் நடத்தி, வெற்றி பெற்று, மக்களின் நம்பிக்கையைப் பெற 3-4 மாதங்கள் ஆகும்.
தற்போது தமிழக அரசின் செயல்பாடு சுணக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் பாலாறு, முல்லை பெரியாறு, பவானி, காவிரி பிரச்னை போன்ற பல தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நடைபெற வேண்டும். மேலும் தள்ளிப்போடக் கூடாது.
ப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கடலில் கொட்டிய விவகாரத்தை, மத்திய, மாநில அரசுகள் முறையாக கையாளவில்லை. 3-ஆவது நாளில்தான் முழுமையாக பணி தொடங்கியது. எண்ணெய் கழிவுகளை முழுமையாக விரைவில் அகற்ற வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com