தூத்துக்குடியில் மீனவர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் விசைப்படகு ஓட்டுநர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் விசைப்படகு ஓட்டுநர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் விசைப்படகு ஓட்டுநர் கிளைன்டன் (37) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு தனது விசைப்படகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம்.
அப்போது, வாகனத்தில் கொண்டுவந்த ஐஸ் கட்டிகளை மீன்பிடித் துறைமுகத்தில் இறக்கிக் கொண்டிருந்த ஐஸ் வியாபாரி ஜெனிட்டனுக்கும், கிளைன்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, கிளைன்டனை 5 பேர் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம்.
இதற்கிடையே, விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 250 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com