மீன் சாப்பிட்டால் ஆபத்தா? வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் ஜெயகுமார்

கடலில் எண்ணெய் கொட்டியுள்ள நிலையில், சென்னையில் மீன் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து என்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் எச்சரித்துள்ளார்.
மீன் சாப்பிட்டால் ஆபத்தா? வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் ஜெயகுமார்

கடலில் எண்ணெய் கொட்டியுள்ள நிலையில், சென்னையில் மீன் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து என்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் எச்சரித்துள்ளார்.
சென்னையை அடுத்த எர்ணாவூரில் கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய் கடலில் பரவியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
கடந்த 28-ஆம் தேதி சென்னை எர்ணாவூரில் இரு கப்பல்கள் மோதி கொண்டதில் எண்ணெய் படலம் பரவியது. இது மாநில அரசின் பிரச்னை அல்ல.
முழுக்க முழுக்க மத்திய அரசைச் சார்ந்தது. கடலில் மாசு ஏற்படக் கூடாது என்பதற்காகவும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் தமிழக அரசு, மத்திய அரசு ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக அரசின் 15 துறைகளும் மத்திய அரசின் துறைகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. 1,500 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் அதாவது 160 ஆயிரம் டன் எண்ணெய் படலம் அகற்றப்பட்டு விட்டது. இந்தப் பணி ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. இன்னும் 20 சதவீத எண்ணெய் படலம் உள்ளது. அதையும் உடனடியாக அகற்றி விடுவோம்.
மீன் சாப்பிடுவதால் பாதிப்பில்லை: ஆழ்கடலில் எண்ணெய் படலம் கிடையாது. நம்முடைய மீன் ஆழ்கடலில் பிடிக்கப்படுவதாகும். எனவே மீன் உணவு வகைகள் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் வராது. மீன் உணவு புரதச் சத்து மிகுந்தது. மீன் சாப்பிட்டால் புற்று நோய், மாரடைப்பு வராது.
மீன் சாப்பிட்டால் வாழ் நாள் அதிகரிக்கும். மீன் பிடித் தொழிலிலும் விற்பனையில் லட்சக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கருதி மீன் உணவு வகைகள் குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீன் சாப்பிட்டால் ஆபத்து என்று வீணான வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ரூ.125 கோடி காப்பீடு: எண்ணூரில் பரவியுள்ள எண்ணெய் படலத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மீனவர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கப்பலின் உரிமையாளர்களிடம் காப்பீடாக திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு ரூ.50 கோடியும், சென்னை மீனவர்களுக்கு ரூ.52 கோடியும், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ரூ.23 கோடியும் என மொத்தம் ரூ.125 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம்.
அதுவரை இரண்டு கப்பல்களையும் எண்ணூர் கடலை விட்டு நகர விட மாட்டோம் என்றார் ஜெயகுமார்.
இதைத்தொடர்ந்து மீன்வளக் கல்லூரி முதல்வர் பிலிக்ஸ், எண்ணெய் படலம் படிந்த இடங்களில் உள்ள மீன் வகைகளைச் சாப்பிடுவது குறித்து 10 பேர் கொண்ட குழுவின் அறிக்கையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கும் ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

மீன் உணவு மெனு

சென்னையில் மீன் வகைகளைச் சாப்பிடுவதால் பாதிப்பில்லை என்பதை விளக்க மீன் வகைகளை உண்ணும் நிகழ்ச்சி செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்றது.
சிந்தாதிரிப்பேட்டை மீன் விற்பனையாளர்கள் சங்கம் நடத்திய இந்த மீன் விருந்தில் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டு, மீன், இறால் என்று மெனுக்களை கேட்டு கேட்டு வாங்கிச் சுவைத்தார். அப்போது நாள்தோறும் ஒரு கிலோ மீன் சாப்பிடுவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com