அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிட்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையை வி.கே.சசிகலா எடுத்துள்ளார்.
புதிய பொருளாளர்: ஓ. பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வி.கே.சசிகலா அறிவித்துள்ளார்.
அவர் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை ஏற்கெனவே அதிமுகவின் பொருளாளர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com