உச்சநீதிமன்றத்தில் தமிழக நீதிபதி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றத்தில் தமிழக நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
உச்ச நீதிமன்றத்தில் 2016-இல் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு, இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு நீதிபதியும் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய நிலையில்,
மூத்த நீதிபதிகள் கொண்ட குழுவானது கொலீஜியம் முறையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 நீதிபதிகளை தேர்வு செய்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது. இதில் தமிழக நீதிபதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை.
தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். நீதிமன்றங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கி பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக நீதிபதிகள் விளங்குகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் இன்னும் 3 நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டிய சூழலில், அந்தப் பட்டியலில் தமிழக நீதிபதிகளின் பெயர்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com