கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தையை மீட்கும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கல்லிங்கரை சாலையிலுள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை, மீட்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூரை அடுத்த கல்லிங்கரை பகுதியிலுள்ள தனியார் தோட்டக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை.
கூடலூரை அடுத்த கல்லிங்கரை பகுதியிலுள்ள தனியார் தோட்டக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கல்லிங்கரை சாலையிலுள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை, மீட்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் கல்லிங்கரை சாலையிலுள்ள சன்னிதாமஸ் என்பவரது தோட்டத்துக் கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை இரவு தவறி விழுந்தது. செவ்வாய்க்கிழமை காலை கிணற்றுக்குள் சப்தம் கேட்டு, சன்னிதாமஸ் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, கிணற்றுக்குள் சிறுத்தை விழுந்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கூடலூர் வனச் சரகர் கணேசன் உள்ளிட்டோர் அந்தச் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், கிணற்றில் இருந்து சிறுத்தை மேலே ஏறி வர ஏணி வைக்கப்பட்டது. ஆனால், சிறுத்தை வெளியே வரவில்லை. இதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், கிணற்றிலிருந்து சிறுத்தை மேலே வர வசதியாக நீண்ட ஏணியைக் கிணற்றுக்குள் இறக்கினர். மேலும், அந்தச் சிறுத்தை வெளியே வந்தவுடன் கூண்டுக்குள் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆள்கள் நடமாட்டம் இருந்ததால், செவ்வாய்க்கிழமை மாலை வரை சிறுத்தை வெளியே வரவில்லை. வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர், அப்பகுதியில் முகாமிட்டு ஆலோசித்து வருகின்றனர். சிறுத்தையை மீட்கும் பணியை, மாவட்ட வன அலுவலர் திலீப் ஆய்வு செய்தார். கூடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசலு தலைமையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com