"தமிழகத்தின் பெருமை'- சாதனையாளர் விருது அறிமுகம்

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களை கெளரவிக்கும் வகையில், "தமிழகத்தின் பெருமை' (பிரைட் ஆஃப் தமிழ்நாடு) எனும் சாதனையாளர் விருது அறிமுகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களை கெளரவிக்கும் வகையில், "தமிழகத்தின் பெருமை' (பிரைட் ஆஃப் தமிழ்நாடு) எனும் சாதனையாளர் விருது அறிமுகம் செய்யப்படுகிறது.
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மார்ச் 19-இல் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
விழாவில், விருதுக்கான பரிந்துரை விண்ணப்பப் படிவத்தை நடிகர் விஷால் வெளியிட உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா பெற்றுகொண்டார். மேலும், பிரைட் ஆப் தமிழ்நாடு எனும் இணையப்பக்கத்தை நடிகர் விஷால் தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பான கே.என்.பாஷா கூறியதாவது:-
தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ஏதாவது துறையில் தன்னுடைய தொழில் செயல்பாட்டை மேற்கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள், விவசாயம், கலை, இலக்கியம் உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். "சாதனையாளர் விருது', "வளர்ந்து வருபவர்களுக்கான விருது' என ஓவ்வொரு பிரிவிலும் இரண்டு விதமான விருதுகள் வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த மூன்று அல்லது 4 பேரை நடுவர்கள் தேர்வு செய்வார்கள். தேர்வுக் குழுவினர் விருது பெற தகுதியானவர்கள் பட்டியலை தயார் செய்வார்கள். அது பார்வையாளர்களின் தேர்வுக்கு விடப்பட்டு இணையம், செல்லிடப்பேசி, வாஸ்ட்ஆப், எஸ்.எம்.எஸ்., உள்ளிட்ட பல தளங்களின் வழியாக வாக்களிப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு நடத்தி, நடுவர்களால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். வளர்ந்து வருபவர்களுக்கான விருதை பெற பரிந்துரைக்கப்
படுபவர்.
பரிந்துரை செய்யப்படும் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 28-ஆம் தேதியாகும். விண்ணப்பங்களை www.prideoftamilnadu.com என்ற இணையதளத்திலும் awards@prideoftamilnadu.com என்ற மின்னஞ்சலிலும் அனுப்பலாம் என்றார்.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுசெயலர் விஷால் கூறுகையில், "விழாவில் கலந்துகொள்வதற்காக வாங்கிய பணம் ரூ.2 லட்சத்தை விவசாயிகளுக்கு கொடுக்கப்போகிறேன். விவசாயிகள் தற்கொலை பரிதாபகரமானது. ஒருபோதும் தற்கொலைகள் தீர்வாகாது. பள்ளிகளில் மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பதிலாக விவசாய நிலங்களுக்கு கூட்டிச் செல்ல வேண்டும்' என்றார்.
சத்யபாமா பல்கலைகழக இணை வேந்தர் மரியாசீனா ஜான்சன், தேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ. ஹேமா ருக்மணி, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது ஆசிப் அலி, நடிகை சிம்ரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com