"நீட்'க்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்றியது தவறு

அகில இந்திய மருத்துவத் தகுதி நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விலக்குக் கோரி, சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியது தவறு என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அகில இந்திய மருத்துவத் தகுதி நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விலக்குக் கோரி, சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியது தவறு என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகத்தில் 1967 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்து வருகின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூலமாக, ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்தில் கல்விச் சூழல் சீரழிந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்ததால், தமிழக மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.
"நீட்'க்கு நிரந்தர விலக்கு கோரி, சட்டப்பேரவையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது தவறானது. இது தமிழகத்துக்கும், தமிழக மாணவர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு தகுதியற்றவர்கள் என அரசே ஏற்றுக் கொள்வது தமிழகத்துக்கே அவமானம். திராவிடக் கட்சிகளின் இருமொழிக் கல்விக் கொள்கையால், மாணவர் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அகில இந்திய நுழைவுத் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் அவர்களை தயார்படுத்த வேண்டும். சீரழிந்து கிடக்கும் கல்வித் துறையை சீரமைக்க வேண்டும். "நீட்' தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வரையி,ல் ஓரிரு ஆண்டுகள் வேண்டுமானால் விலக்கு கேட்கலாம். நிரந்தர விலக்கு என்பது தமிழகத்தை தனிமைப்படுத்தி விடும். தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதுதொடர்பாக, சென்னையில் புதன்கிழமை நடைபெற உள்ள மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் விவாதித்து கருத்து தெரிவிக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com