ஸ்டாலினை பார்த்து சிரித்தது குற்றமாகாது: பன்னீர்செல்வம் பேட்டி!

திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை பார்த்து சிரித்தது குற்றமாகாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ஸ்டாலினை பார்த்து சிரித்தது குற்றமாகாது: பன்னீர்செல்வம் பேட்டி!

சென்னை: திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை பார்த்து சிரித்தது குற்றமாகாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக சசிகலா அதிரடியாக அறிவித்தார்.
இதன் பின் செய்தியாளர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னை பொருளாளர் பதவியில் 10 ஆண்டுகளுக்கு முன் நியமித்தார். அப்போது முதல் அந்த பணியை நிறைவாக செய்து வருகிறேன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா யாருக்கு எந்தப் பொறுப்பை பணியைக் கொடுத்தாலும், அந்தப் பொறுப்பில் பணியில் நிறைவு இல்லாவிட்டால், அவர்களை அந்த பொறுப்பில் பணியில் இருக்கவிடமாட்டார். அப்படி என்னிடம் கொடுத்த பொறுப்பில், பணியில் நிறைவு இல்லாவிட்டால் எப்படி என்னிடம் சோதனை காலத்தில் எல்லாம் முதல்வர் பணியை என்னிடம் தருவார் ஜெயலலிதா. அதனால் ஜெயலலிதா அவர்களுக்கு என் பணியில் நிறைவு இருந்தது. அதனால் எனக்கு சோதனை காலத்தில் எல்லாம் முதல்வர் பணியை அளித்தார்கள்.
மேலும், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம் சிரிப்பு ஒன்றுதான் அதனால், எதிர்க்கட்சி செயல் தலைவர் ஸ்டாலினை பார்த்து சிரித்தது குற்றமாகாது.
என் மடியில் கனமில்லை; எனவே நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை. ஆளுநருடனான எனது சந்திப்பு குறித்து பொறுத்திருந்து பாருங்கள். என்னை அம்மா கொடுத்த பதவியில் இருந்து யாரும் நீக்க முடியாது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com