கோவையில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது.
கோவையில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது.

தமிழக வனத் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை சார்பில் ஆண்டுதோறும் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் நடத்தப்பட்டு வருகிறது.  48 நாள்கள் நடைபெறும் இம்முகாமில் தமிழகம் மற்றும் புதுவை கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகள் பங்கேற்கின்றன.

அதன்படி இந்த ஆண்டுக்கான யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் இன்று தொடங்கியது. சிறப்பு முகாமை, இந்து அறநிலைத்துறை ஆணையர் வீரசண்முகம் துவக்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு கோயில்களைச் சேர்ந்த 30 யானைகள் கலந்துகொண்டுள்ளன.

தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக இந்தாண்டு யானைகளுக்கான சிறப்பு முகாம் 30 நாட்களாக குறைக்கப்பட்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com