ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணை தொடக்கம்

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணையை இன்று சென்னை மெரீனாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தொடங்கி உள்ளார்.

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணையை இன்று சென்னை மெரீனாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தொடங்கி உள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய அறவழிப்போராட்டத்தில் ஜனவரி 23-ஆம் தேதி போராட்டக்காரர்களை கலைக்க வன்முறை சம்பவங்கள் நடந்தது. போலீஸார், மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கல்வீச்சு, குடிசை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு என காவல்துறையினரே வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களின் ஒளிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் காவல்துறையின் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த விசாரணைக் குழுவானது, போராட்ட வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மெரீனா கடற்கரையில் போராட்டம் தொடங்கிய விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் நீதிபதி ராஜேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், போராட்ட வன்முறை தொடர்பாக காவல்துறை அதிகாரிகளான பாலகிருஷ்ணன், அன்பு, சுதாகர் உள்ளிட்டவர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.

அதன்பின்னர், இதனைத் தொடர்ந்து வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதிக்குச் சென்ற நீதிபதி ராஜேஸ்வரன், மீன்சந்தையில் நடந்த நிகழ்வுகள் குறித்து மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com