'தமிழகத்தில் மது அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது'

தமிழகத்தில் மது அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று "எக்ஸ்னோரா' அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மல் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் மது அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று "எக்ஸ்னோரா' அமைப்பின் நிறுவனர் எம்.பி.நிர்மல் வேதனை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது மது அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
தமிழகத்தில் மதுவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கும் சட்ட பஞ்சாயத்து இயக்கம், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சட்ட கல்லூரி மாணவி நந்தினி, அறப்போர் மற்றும் மக்கள் பாதை இயக்கங்களின் மதுவிற்கு எதிரான செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர். சில ஆண்டுகளாக போயஸ் தோட்ட இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள், அவரது நலவிரும்பிகள் யாரையும் அவரை சந்திக்க அங்குள்ளவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த கடைசி காலங்களில் அவரை யாரும் அக்கறையோடு கவனித்துக்கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com