ஆளுநரிடம் அளித்த மனுவில் பன்னீர்செல்வம் - சசிகலா மனுவில் இருந்தது என்ன..?

ஆளுநரிடம் அளித்த மனுவில் பன்னீர்செல்வம் - சசிகலா மனுவில் இருந்தது என்ன..?

தமிழக முதல்வரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வமும், அதிமுக சட்டப்பேரவைக்குழு

சென்னை: தமிழக முதல்வரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வமும், அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா நேற்று வியாழக்கிழமை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, அவரது மாளிகையில் நேரில் சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்கும் உரிமை கோரினார்.
அப்போது தமது ஆதரவாளர்களின் பட்டியலையும் ஆளுநரிடம் சசிகலா அளித்தார்.
எனினும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர் தனது முடிவை எப்போது அறிவிப்பார் என்பதும் தெரியவில்லை. எந்த முடிவும் எடுப்பதற்கு முன்னதாக சட்ட நிபுணர்களை அவர் கலந்து ஆலோசிக்கக்கூடும் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஆளுநரை தனித்தனியே அளித்த மனுவில் உள்ள விவரங்கள் தெரியவந்துள்ளது.

பன்னீர்செல்வம் அளிவில் மனுக்களில் இடம்பெற்றிருந்த 5 கோரிக்கைகளும்... 6 கோப்புகளும்..
1. என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வைத்துவிட்டனர்.
2. அந்த ராஜிநாமாவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்.
3. முதல்வராக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது.
4. ஆளுநர் மாளிகையில் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது. பெரும்பான்மை நிரூபிப்பதில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.
5. சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்.

6 கோப்புகள்:
1. தான் ராஜிநாமா செய்தததை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்பதற்கான கடிதம்.
2. போயஸ் கார்டன், வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவது.
3. சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் மாற்றம் தொடர்பான உத்தரவு.
4. எல்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டுள்ளதாக 4 எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த புகாரின் நகல்.
5. சசிகலா பொதுச்செயலாளர் ஆனதில் விதிமுறை மீறப்பட்டதற்கான ஆதாரமாக அ.தி.மு.க பை-லா.
6. தனக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதை நிருபிக்க அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதற்கான அனுமதி கேட்கும் கடிதம்.

சசிகலா மனு:
1. எனக்குத்தான் அனைத்து அதிமுக பேரவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர். அதற்காக கையெழுத்தும் போட்டு கடிதம் கொடுத்துள்ளனர்.
2. முதல்வராக பதவியேற்க எனக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
3. பேரவையில் எனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது.
4. நிரூபிக்க சொன்னால் அதை நான் நிரூபித்து காட்டுவேன்.
5. எனவே, அதற்கான முதல் வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், ‘இருதலைக்கொல்லி’ நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பன்னீர்செல்வம், சசிகலா என இருவருக்கும் ஒரே நாளில் நேரம் ஒதுக்கிக்கொடுத்தார்.

வாழ்வா? சாவா? போராட்டத்தில் சரியான முடிவை அறிவிக்கும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கையில்தான் இருக்கிறது. நல்ல முடிவுக்காக சில நாட்கள் காத்துதான் கிடக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com