ஜல்லிக்கட்டு: துள்ளிக்குதித்த காளைகள்... துரத்திப்பிடிக்கும் காளையர்கள்...

ஜல்லிக்கட்டு: துள்ளிக்குதித்த காளைகள்... துரத்திப்பிடிக்கும் காளையர்கள்...

தமிழர்களின் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. துள்ளிக்குதித்து வரும் காளைகளை துரத்திப்பிடித்து

மதுரை: தமிழர்களின் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. துள்ளிக்குதித்து வரும் காளைகளை துரத்திப்பிடித்து அடக்கும் காளையர்களின் காட்சியால் அலங்காநல்லூர் கோலாகலமாக காட்சியளிக்கிறது. .
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நீதிமன்ற தடையால், நடைபெறமால் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி மெரீனாவில் இளைஞர்கள், மாணவர்கள் நடந்திய தன்னெழுச்சி அறப்போராட்டத்தின் மூலம் மீட்டு எடுக்கப்பட்டது.
இதையடுத்து பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அவரச சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகம்  முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு பகுதிகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்குவதற்கு முன்பாக மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின் விழா குழு சார்பில் உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். வாடிவாசல் முன் கோயில் காளைகளுக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒடுவதற்கு கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
3 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 950 காளைகள், 1500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறந்த காளைக்கும், காளைய அடங்கிய வீரர்களுக்கு ஆல்டோகார், டிராக்டர், 5 புல்லட், தங்கம் மற்றும் வெள்ளி காசு போன்றவை பரிசாக வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு விழா குழுவினர் தனி கேலரி அமைத்து கொடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டில் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நடிகர் ராகவா லாரன்ஸ் அலங்காநல்லூருக்கு வருகை தந்து போட்டியை பார்த்து ரசித்து வருகிறார். லாரன்ஸ் வருகையால் மாடு பிடி வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். லாரன்சுடன் ஆரி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் அலங்காநல்லூர் வருகை தந்துள்ளனர்
ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலங்காநல்லூர் வந்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com