அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள் தனியார் நட்சத்திர விடுதியில் அதிகாரிகள் ஆய்வு

அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அடைத்து
அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள் தனியார் நட்சத்திர விடுதியில் அதிகாரிகள் ஆய்வு

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக வெளியாக தகவலை அடுத்து தனியார் நட்சத்திர விடுதியில் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள ஒரு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அவர்களது குடும்பத்தினர் கூட பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், சுதந்திரமாக நடமாடும் அடிப்படை உரிமையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர்.இளவரசன் மற்றும் வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., கூவாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு (பிப்.13) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், கூவத்தூரில் சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் இன்று காலை முதல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாச்சியர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்டு ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com