அதிமுகவில் இருந்து மதுசூதனன் நீக்கம்: அவைத் தலைவராக செங்கோட்டையன்

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து அவைத் தலைவர் இ.மதுசூதனன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து மதுசூதனன் நீக்கம்: அவைத் தலைவராக செங்கோட்டையன்

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து அவைத் தலைவர் இ.மதுசூதனன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, புதிய அவைத் தலைவராக கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
கட்சியின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டு, கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் மதுசூதனன் செயல்பட்டுள்ளார்.
இதனால் அவர் அவைத் தலைவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.
10 ஆண்டுகள் அவைத் தலைவர்: அதிமுக தொடக்க கால உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன், 2007-ஆம் ஆண்டு முதல் கட்சியின் அவைத் தலைவராக இருந்து வந்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவைத் தேர்வு செய்வதற்காக, கடந்த டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்துக்கு இ.மதுசூதனன் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய அவைத் தலைவராக கே.ஏ.செங்கோட்டையன்: இதையடுத்து, புதிய அவைத் தலைவராக எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் முன்னர் வகித்துவந்த அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். பல முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தவர்.
2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது வருவாய்- தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார். 2012-ஆம் ஆண்டில் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 2016-ஆம் ஆண்டு தேர்தலில் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டார். அதிமுக எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மூத்த அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்து செங்கோட்டையன் மேற்கொண்டுவரும் நிலையில், அவருக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com