சுய விருப்பத்துடன் தங்கியுள்ளோம்: எம்எல்ஏக்கள் பேட்டி

சுய விருப்பத்துடன் சொந்தச் செலவிலேயே விடுதியில் தங்கியுள்ளோம் என அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
சுய விருப்பத்துடன் தங்கியுள்ளோம்: எம்எல்ஏக்கள் பேட்டி

சுய விருப்பத்துடன் சொந்தச் செலவிலேயே விடுதியில் தங்கியுள்ளோம் என அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் 129 எம்எல்ஏக்கள் பிணைக் கைதிகளாக சிறைவைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து, கூறியதாவது:-
முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்): சுதந்திரமாக இருக்கிறோம். யாரும் மிரட்டவில்லை. எந்த அச்சுறுத்தலும் இல்லை. 129 எம்எல்ஏக்கள் இங்கு உள்ளோம். ஒவ்வொருவரும் பிடித்தமான, வசதியான இடத்தில் சுய விருப்பத்தின்பேரில், இந்தக் குடிலைத் தேர்ந்தெடுத்துத் தங்கியுள்ளோம்.
யாரும் தடையாக இல்லை. நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை உறவினர்கள் யாரும் தாக்கல் செய்யவில்லை.
வேறு நபர்கள் மனுக்களை தாக்கல் செய்து, சிறை வைக்கப்பட்டிருப்பதாக விஷமப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்): அதிமுகவின் உள்கட்சி பிரச்னை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அமைந்தால் அதற்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்போம் என திமுக மூத்த நிர்வாகி சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறுகிறார். ஓ.பி.எஸ். பின்னணியில் திமுக இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவேதான், ஓ.பி.எஸ்ஸுக்குப் பதிலாக சசிகலாவை முதல்வராக்கும் சரியான முடிவை எடுத்துள்ளோம்.
பிற எம்.எல்.ஏ.க்கள்..: எம்எல்ஏக்களில் சிலர் மட்டுமே கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். மற்ற உறுப்பினர்களும் இதே மனநிலையில்தான் இருப்பதாகவும், ஆளுநரின் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் சென்னை வருவார்கள் என்று அதிமுக முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com