பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு நடிகர் விசு வாட்ஸ்-அப் வீடியோவில் வேண்டுகோள்

பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள் என அதிமுக எம்எல்ஏக்களுக்கு நடிகரும், இயக்குநருமான விசு, ‘வாட்ஸ் அப்’ வீடியோ மூலம் தனது
பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு நடிகர் விசு வாட்ஸ்-அப் வீடியோவில் வேண்டுகோள்

சென்னை: பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள் என அதிமுக எம்எல்ஏக்களுக்கு நடிகரும், இயக்குநருமான விசு, ‘வாட்ஸ் அப்’ வீடியோ மூலம் தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான விசு, தனது ‘வாட்ஸ் அப்’  வீடியோ பதிவில்,
வணக்கம்... நான் விசு பேசுகிறேன். தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும். பன்னீர்செல்வம் ஆளுநரை சந்திக்க 5 மணிக்கு அப்பாயின்ட்மென்ட். 5 என்பதை எதுக்கு சொல்வோம். பஞ்ச பூதங்களுக்கு சொல்வோம். அல்லது பஞ்ச பாண்டவர்களை சொல்வோம். இவை பாசிட்டிவ் ஆனவை. சசிகலாவுக்கு 7½ மணிக்கு ஆளுநரை பார்க்க நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள். 7½ என்பதை எதற்கு சொல்வோம் என்பது உங்களுக்கே நல்லா தெரியும். என்னடா.. இப்படி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.

நான் 6 ஆண்டு ஜெயா டி.வி.க்காக ‘மக்கள் அரங்கம்’ நிகழ்ச்சி நடத்தினேன். முதலில் ஒருநாள் ஜெயலலிதாவை பார்த்ததோடு சரி. அதற்கு அப்புறம் என்னை ஒரு தடவை கூட பார்க்கவிடவில்லை. அதை என்னால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அப்போ பன்னீர்செல்வம் என்ன நிலையில் கஷ்டப்பட்டாரோ, அதே கஷ்டம் தான் எனக்கும் ஏற்பட்டது. பார்க்கவே முடியவில்லை.

இத்தனைக்கும் பொதுமக்களை வைத்து நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது என்ன நடக்குது.. ஏது நடக்குது.. என்று சொல்ல வேண்டும் அல்லவா?. ஆனால், என்னால் சொல்லவே முடியவில்லை. யார் யாரோ வந்தாங்க. என்னென்னமோ உத்தரவு போட்டாங்க. ஒரு நாள் சொல்வதை மறுநாள் மாற்றி சொல்வான். இப்படித்தான் யாரோ ஒரு குடும்பம் என்னை கட்டுப்படுத்தியது. எனக்கு ஒண்ணுமே புரியல. இப்படி கூட நடக்குமா? என்று நீங்க யோசிப்பீங்க.

யோசனை பண்ணி பாருங்க. ஜெயலலிதா இறந்தபோது, அந்தப்பக்கத்தில் யார் யாரோ நின்னாங்க. இதேதான் அங்கேயும் நடந்தது. ஒருவேளை அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைத்தால் அங்கும் யார் யாரோ வருவார்கள். என்ன என்னவெல்லாமோ செய்வாங்க. இதை மக்களிடம் ஒன்றும் கேட்க முடியாது. மக்கள் தலையெழுத்து 135 பேரிடம் இருக்கிறது. அவர்களை கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் வாழ்க்கை உங்களிடம் இருக்கிறது. பிளீஸ்.. பிளீஸ்.. கண்டிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள். சசிகலாவை அல்ல என்று பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com