முதல்வருக்கு ஆதரவு தரும் 'முதல்' அமைச்சர்: பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் மாஃபா பாண்டியராஜன்

தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருகை தருகிறார்.
முதல்வருக்கு ஆதரவு தரும் 'முதல்' அமைச்சர்: பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் மாஃபா பாண்டியராஜன்


சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருகை தருகிறார்.

ஆவடி தொகுதி எம்எல்ஏவும், தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவருமான மாஃபா பாண்டியராஜன், இதுவரை சசிகலா அணியில் இருந்தவர்.

முன்னதாக, அதிமுகவுக்கு வாக்களித்த தொகுதி வாக்காளர்களின் குரலுக்கு மதிப்பளிப்பேன் என்று, இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் மாஃபா பாண்டியராஜன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து மாஃபா பாண்டியன் தனது ஆதரவை தெரிவிப்பார் என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

வி.கே. சசிகலா ஆளுநரை சந்தித்த போது, மாஃபா பாண்டியராஜன் உடன் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com