பன்னீர்செல்வம் இல்லம் வருவோரின் விவரம் சேகரிப்பு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு வந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்க வருவோரின் விவரங்களை தொழில்நுட்பக் குழுவினர் சேகரித்து வருகின்றனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு வந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்க வருவோரின் விவரங்களை தொழில்நுட்பக் குழுவினர் சேகரித்து வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிமுகவினர், பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, இவர்களின் செல்லிடப்பேசி எண், ஆதார் அட்டை எண், முகவரி உள்பட பல்வேறு விவரங்களை தொழில்நுட்பக் குழுவினர் சேகரித்து வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு பகுதியில் இருந்து வரும் பொதுமக்களை அழைத்து அதிமுகவில் யாருக்கு ஆதரவு குறித்தும், பிரச்னைகள் தொடர்பாகவும் கேட்டு படப்பதிவு செய்து உடனே விடியோ மூலம் பதிவு செய்து ஆன்லைன் வழியாக யூ டியூப்பில் வெளியிட்டும் வருகின்றனர். அத்துடன் கட்செவி அஞ்சலில் ("வாட்ஸ்-அப்') ஆதரவு தொடர்பாகவும் தகவல்களை பரப்பியும் வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com